ஈரோடு;
ஈரோட்டில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வழிகாட்டுதலில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எ.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரபாகர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தகூடிய துன்பச் சுழல்களை திறம்பட குறைத்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பும், பாராமரிப்பும் தேவைப்படும் போது, அவசர தொலைபேசி சேவை 1098 அழைத்து உதவ வேண்டும்.

மேலும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை, சுரண்டல், கைவிடப்பட்ட குழந்தைகள், பள்ளி இடைநின்றல், கடத்தல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தல், அவர்களை கொடுமைப்படுத்துதல், உரிமை மீறல்கள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: