அந்தத் தகுதியை அடைந்ததாக என்னைக் கட்சி உறுப்பினராக ஏற்றுக் கொண்டது. அதற்காக நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்ச மல்ல.

மாதம் என் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லெவி (நிதி)கட்ட வேண்டும் என்பது கட்சியின் விதி. அந்த விதியின் படி நான் மாதாமாதம் கட்சிக்கு பணம் கட்டிவந்தேன். அந்த லெவியைக் கட்டாவிட்டால் ஆட்டோமேட்டிக்காக உறுப்
பினர் அந்தஸ்து ரத்தாகிவிடும். மாதாமாதம் பணம் கட்டுவார் என்பதற்காக கட்சி
எளிதில் யாரையும் உறுப்பினராக்கி விடாது. எந்தக் கட்சியிலேயாவது மாதா
மாதம் பணம்கட்டி உறுப்பினர்கள் இருக்கிறார்களா? நான் கட்சி உறு்பினர் என்ற
தகுதியை அடைந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதினேன். கம்யூனிஸ்டு என்ற கௌரவத்திற்கு இணை இப்பிரபஞ்சத்தில் வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 

இங்கே ஒருகட்சி மிஸ்டுகால் கட்சியாக இருக்கிறது. இன்னொரு கட்சியோ
இ-மெயில் கட்சியாக இருக்கிறது. மிஸ்டு காலோ,இ-மெயிலோ அனுப்பிவிட்டால்
எவ்வளவு பெரிய கிரிமினலாக இருந்தாலும் சமூகவிரோதியாக இருந்தாலும்
கட்சியில் உறுப்பினராக்கி விடுகிறார்கள். அப்புறம் அந்தக் கட்சிகளின் தரம்
எப்படி இருக்கும் என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.

Leave A Reply

%d bloggers like this: