போர்ட் எலிசபெத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில்,2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்தது.139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ரபாடாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 239 ரன்னில் ஆட்டமிழந்தது.
இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.எளிய இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 22.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.11 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ரபாடாவின் சாதனை:
தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரபாடா தனது அபார வேகத்தால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களை பந்தாடினார்.11 விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ரபாடா மற்றொரு உலகசாதனையை செய்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா ஒவ்வொரு 39 பந்திலும் ஒரு விக்கெட் வீழ்த்தி (ஸ்ட்ரிக் ரேட்) டெஸ்ட் போட்டிகளில் 122 வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஜார்ஜ் லோகன் ஒவ்வொரு 34.1 பந்திலும் ஒரு விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.தற்போது குறைந்த பந்தில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் (ஸ்ட்ரிக் ரேட்) வரிசையில் ரபாடா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரபாடாவின் வேதனை:
முதல் இன்னிங்சில் தனது பந்தில் ஸ்மித் வெளியேறிய போது ரபாடா தோள்பட்டையை இடித்தார்.2-வது இன்னிங்சில் வார்னரை வீழ்த்தியதும் அவரது முகம் அருகில் ஆக்ரோஷமாக கொக்கரித்தார்.

ஸ்மித்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக மூன்று டிமெரிட் புள்ளிகளும், வார்னருக்கு எதிராக குற்றச்சாட்டில் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றிருந்ததால் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்மித் விவகாரத்தில் போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.மூன்றாவது டெஸ்ட் போட்டிகேப்டவுனில் 22-ஆம் தேதி தொடங்குகிறது.

Leave A Reply

%d bloggers like this: