ஈரோடு, மார்ச் 13-
மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கக்கூடாது என சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 7 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் துவக்கி பேசினார். பொதுசெயலாளர் பி.கனகராஜ் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக என்.முருகையா, பொதுச்செயலாளராக பி.கனகராஜ், பொருளாளராக எஸ்.தனபால் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி நிறைவுரையாற்றினார்.

தீர்மானங்கள்:
சாலைப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழில் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க கூடாது. இன்சூரன்ஸ், சுங்கவரி கட்டணத்தை குறைத்து நெறிமுறைப்படுத்திட வேண்டும். சுங்கச்சாவடி அருகே இலவச கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும். வீடு இல்லா ஓட்டுனர்களுக்கு வீடு வழங்கி, நலவாரிய உதவிகளை வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுனர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.