கொழும்பு:
இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற 4- வது லீக் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.கொழும்பு நகரில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் 19 ஒவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தால் 19 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 17.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை (153 ரன்கள்) எளிதாக துரத்தி பிடித்தது.வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது,”கொழும்பு நகரில் திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால் பந்துவீசுவது சவாலானதாக இருந்தது.ஆனாலும் இளம் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இலங்கை பேட்டிங் வரிசையை திணறடித்தனர்.மனிஷ் பாண்டே-தினேஷ் கார்த்தி கூட்டணி சிறப்பாக விளையாடியது.இது தான் எங்கள் அணியின் முழுமையான கூட்டு முயற்சியாகும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: