கொல்கத்தா:
இந்த விவகாரம் கணவன்-மனைவி இடையேயான பிரச்சனையாக இருந்தாலும்,தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பிறகு துபாய் ஹோட்டலில் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்திற்காக பணம் பெற்றதாக அவரது மனைவி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பின்பு முகமது‌ ஷமி சென்று வந்த இடம் குறித்த தகவல்களை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என கொல்கத்தா காவல்துறை கேட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இணை ஆணையர் பிரவீண்குமார் திரிபாதி கூறியதாவது, ‘இந்தியாவுக்கு வெளியே முகமது ‌ஷமியின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள நாங்கள் பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.பிசிசிஐ அளிக்கும் தகவல் அடிப்படையில் முகமது ‌ஷமி மீது அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.