புவனேஸ்வர்:
ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு இடையே மகாநதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சனையில், நடுவர் மன்றத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மகாநதி நீரை பகிர்வதில் பிரச்சனை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கில் நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து தற்போது மத்திய அரசு 3 நீதிபதிகளைக் கொண்ட நடுவர் மன்றத்தை அமைத்துள்ளது. நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான இந்த நடுவர் மன்றத்தில் நீதிபதிகள் ரவி ரஞ்சன், இந்தர்மீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 1956-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, மகாநதி நடுவர் மன்றமானது 3 ஆண்டுகளுக்குள் தமது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் நடுவர் மன்றம் தமது பணியை நீட்டித்துக் கொள்ளலாம்.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த நடுவர் மன்றம் மூலம் ஒடிசா, சத்தீஸ்கர் இடையேயான நீண்டகால நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.