ஈரோடு, மார்ச் 13-
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி செவ்வாயன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் சார்பில் விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் நர்மதா தேவி துவக்கி வைத்தார். சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா, மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கலைப்பிரச்சாரம் ஈரோடு பேருந்து நிலையத்தில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்தி, கோபி, பெருந்துறை, மொடக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து பாடல்கள் மற்றும் கிராமிய நடனங்கள் மூலமாக வெளிப்படுத்தினர். பெண்கள் கிராமங்களில் உள்ள புகார் குழுக்கள் மூலமாக தங்கள் புகாரை தெரிவிக்கலாம். பெண்கள் வன்கொடுமைகள் குறித்து 1091 என்ற இலவச தொலைபேசியில் அழைத்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: