திருப்பூர். மார்ச். 12-
புதியதாக அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் அருகிலுள்ள ஆறாக்குளம் கிராம மக்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இம்மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது; பல்லடம் ஆறாக்குளத்திலிருந்து திருச்சி சாலை செல்லும் வழியில் உள்ள ஒரு தோட்டப் பகுதியில் அரசு மதுபானக் கடை புதியதாக துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தின் அருகாமையிலேயே மேல்நிலை பள்ளி, நூற்பாலைகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இதனால் பெண்கள், மாணவிகள் ஆகியோர் நாள்தோறும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இத்தகைய நிலையில் அங்கு மதுபானக் கடை அமைத்தால் போதை ஆசாமிகளால் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து, அந்த மதுபான கடையை வேறு இடத்திற்க்கு மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: