ஈரோடு, மார்ச் 13-
சிபிஎம் மூத்ததோழர் டி.பி.முத்துசாமி நினைவு தின பொதுக்கூட்டம் ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளருமான டி.பி.முத்துசாமியின் 28 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் திங்களன்று ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் பி.ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான எஸ்.முத்துக்கண்ணன் சிறப்புரை ஆற்றினார். மேலும், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், விஜயராகவன், பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் லலிதா ஆகியோர் பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் திரளானோர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.