அமராவதி:
தென் மாநிலங்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு வடமாநிலங்களை மட்டும் மத்திய பாஜக அரசு வளப்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.ஆந்திர சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என எதுவும் இல்லை. அனைத்தும் மக்களின் பணம். தென் மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகின்றன. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் இந்த பாகுபாடு?

ஆந்திரா மாநிலம் இந்த நாட்டின் அங்கம் இல்லையா? ஏன் எங்களது வரி வருவாயை வடக்கு, கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள்? அந்த நிதியை ஏன் எங்களுக்கு தர மறுக்கிறீர்கள்? சிறப்பு அந்தஸ்து மறுப்பு தேசிய கொள்கை வகுப்பு அகாடமி, தேசிய உயிரியல் ஆய்வு மையங்களை ஏன் ஆந்திராவில் அமைக்கவில்லை? ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தெலுங்கானா தனி மாநிலத்தை மத்திய அரசு உருவாக்கியது. அப்படியானால் அதே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்தை மட்டும் மத்திய அரசு தர மறுப்பது ஏன்? ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட போது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத்தானே நிறைவேற்ற கோருகிறோம்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: