கோவை, மார்ச் 13-
கோவையில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாயன்று துண்டித்தனர்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 83க்கு உட்பட்ட ராஜ வீதியில் வசிப்பவர் கே.ஐ.எட்வின். இவர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணமான ரூ.16 ஆயிரத்து 845 செலுத்ததால் செவ்வாயன்று அவரது கட்டடத்தின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல் வார்டு எண் 25க்கு உட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் என மொத்தம் ரூ.27 ஆயிரத்து 796 செலுத்தாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.

மேலும், பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Leave A Reply