சேலம்,
சேலம் விமான நிலையம் விரிவாக்க பணி தொடர்பாக அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை, அப்பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

சேலத்திலுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அரசு புறம்போக்கு, விவசாய நிலங்கள் வீடு மற்றும் கிணறு ஆகியவற்றின் தற்போதைய நிலவரம் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கான இடத்தினை அளவீடு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் குழு ஒன்றினை அமைத்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்கள் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் முறையிட்டனர்.

இதற்கிடையே வருவாய் துறை அலுவலர்கள் செவ்வாயன்று பொட்டியபுரம் ,சட்டூர், சிக்கனம்பட்டி ,ஊராட்சிகளில் நில அளவீடு செய்ய வந்தனர். இதனையறிந்த விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் வருவாய் அலுவலரின் வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்்பான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலத்தினை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: