பாஜக மற்றும் மோடி அரசை விமர்ச்சிப்பவர்களை குறிவைத்து அவர்களின் சமூக ஊடக பக்கம் மற்றும் இணையதளங்களை முடக்குவதை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடர்ந்து செய்து வருகிறது. இது நிறுவனமயப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் பணியாகவும், பணியாகவும் நடைபெற்று வருகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

கடந்த 2017ல் மட்டும் பாஜகவை விமர்ச்சித்த மற்றும் அவர்களின் மூகமூடியை கிழித்த  1329 சமூக வலைத்தள பக்கம் மற்றும் இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 2016 ஆண்டில் முடக்கப்பட்ட அளவை  விட 38 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த வலைத்தளங்கள் அனைத்தும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் இருப்பதாக கூறி முடக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கு ஆட்சேபம் என்றால் பாஜகவிற்கு.

பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பிறகு வலை 2.0-சமூக ஊடகங்களின் நடவடிக்கைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் ஆட்சேபிக்கக்கூடிய உள்ளடக்கம் என்ற பெயரில் பல சமூக ஊடகங்களை முடக்கி வருகிறது. இந்த வலை 2.0 தணிக்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு79 (3) (பி) 2000 இன் கீழ் நடைபெற்று வருகிறது.

கடந்த 2014இல் 10 இணையதள முகவரிகளை முடக்கியது. பின்பு 2015ஆம் ஆண்டில் 587 ஆகவும், பின்னர் 2016இல் 964ஆகவும் ,நவம்பர் 2017 ஆம் ஆண்டில் 1329 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் 352 முகநூல் இணையதள முகவரிகளையும், 2016 ஆம் ஆண்டில் 363 , பின்னர் நவம்பர் 2017 ல் 530 ஆக உயர்ந்துள்ளது. ட்விட்டரில் 2015ல் முடக்கப்பட்ட இணையதள முகவரிகள் 27 , பின்னர் 2016 ஆம் ஆண்டில் 196ஆகவும், நவம்பர் 2017 ல் 588 ஆகவும் உயர்ந்துள்ளது. யூடுப்பில் கடந்த நவம்பர் 2017 ஆம் ஆண்டு வரை 123 இணையதள முகவரிகளை முடக்கியுள்ளது. இவை அனைத்தும் பாஜக கையில் வைத்திருக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்ட இணையதள முகவரிகள் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டு வருகின்றன 2014 இல் 432 இருந்தது, 2015 இல் 632ஆகவும், நவம்பர் 2017 இல் 83 ஆக குறைந்துள்ளது.

குஜராத்தில் வியாபாரிகள் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் குஜராத் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இனிமேலும் பாஜக வந்தால் நமது வியபாரம் ஒட்டுமொத்தமாக காலியாகி விடும் என அஞ்சிய குஜராத் வியபாரிகள் பலர், தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரசீதில் நாங்கள்  ” தாமரை சின்னத்தில் வாக்களித்தது எங்கள் மிகப் பெரிய தவறு “என்ற வாசகம் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் மக்களை இனியும் பாஜகவிற்கு வாக்களித்தால் இதை விட மோசமான நிலை உருவாகும் என மறைமுகமாக எச்சரித்தனர். இதனை   வெளியிட்டதற்காக முஹம்மத் அனஸ் என்ற பத்திரிகையாளரின் முகநூல் முடக்கப்பட்டது. இதேபோல், முகநூலில் ஒரு பிரபலமான பக்தர் பக்கம் “இந்துத்துவா மனிதர்கள்” என்று அழைக்கப்பட்டது, பாஜக அரசு மற்றும் அதன் இந்து அடிப்படைவாதச் சிந்தனை ஆர்.எஸ்.எஸ் பதவிகளில் வெளிப்படையாக விமர்சித்தது, கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கப்பட்டது.

முகநூல் நிறுவனம் வழங்கியிருக்கும் புள்ளிவிபரத்தின்படி, முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்திய அரசிடம் இருந்து முகநூல் பக்கம் குறித்தும், அவர்களின் விபரம் குறித்தும் தகவல்கள் பெறும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  டிசம்பர் 2016இல் 7289 கோரிக்கைகளும் , 2017 இல் 9853 கோரிக்கைகளும் முகநூலிடம் பாஜக அரசால் கோரப்பட்டது. பாஜக அரசு முடக்கிய பல சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் இணைய பக்கங்கள் அனைத்தும் மதவெறுப்புணர்ச்சியை தூண்டுவதாக குற்றம் சுமத்தி முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சமூக ஊடகங்களை முடக்குவது, மக்களின் பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவது மக்களிடம் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இது போன்ற செயல்களால் தொடர்ந்தால்  பாஜக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்பது மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் மூலமே பாஜக எதிர்ப்பு பன்மடங்கு பெருகி ஆட்சியதிகாரத்தில் இருந்து பாஜகவை தூக்கி எறியும்  என்று சமூக வலைத்தள ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: