ராய்ப்பூர்,
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கிஸ்டாரம் பகுதியில் உள்ள 212வது பட்டாலியனைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலிஎண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.