ஐதராபாத்,
தெலுங்கானாவில் உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி கைதி ஒருவர் மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தன் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும்,  அதற்கு காரணமான காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து மின் கோபுரத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அந்த நபர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply