கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே 12ம் வகுப்பு மாணவி ஈவ்டீசிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், இவரது மகள் அருகில் உள்ள அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பொதுத்தேர்வை தான் படித்து வந்த அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் மாணவி எழுதி வந்தார். மாணவி நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்பியபோது சக மாணவர்கள் பசுபதி மற்றும் சந்தன பாண்டியன் ஆகியோர் மாணவியின் ஹால் டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது பெற்றோரிடம் இச்சம்பவத்தை கூறியுள்ளார். இந்நிலையில் இன்று தேர்வு எழுத இயலாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவியின் பெற்றோர் பாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: