புதுதில்லி:
குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின், சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்புத் தொகையைப் பராமரிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அபராதம் மூலம் வசூலிக்கப்படும் தொகையானது, வங்கிக்கு கிடைக்கும் வட்டிவருவாயைக் காட்டிலும் அதிகமானது. இது பாரத ஸ்டேட் வங்கி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதையடுத்து, மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புற வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ. 50 அபராத தொகை, தற்போது ரூ. 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்ட அபராதம் ரூ. 40-இலிருந்து முறையே, ரூ. 12 ஆகவும், ரூ. 10 ஆகவும், குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தனியாகும்.இந்த புதிய அபராத நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: