ஈரோடு, மார்ச் 12-
விவசாய நிலத்தில் புதியதாக கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா சிறுவலூர் கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோழிப்பண்ணை அமைந்தால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் கோழிப்பண்னை அமைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் இரு புறத்திலும் ஓடைகளாக உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இந்த ஓடை நீரை பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணை அமையும் போது ஓடைகள் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே, விவசாய பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.