மாட்ரிட்:
ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஞாயிறன்று நடைபெற்ற 4 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.முதல் லீக் ஆட்டத்தில் ரியல் சோஷிடட் அணியும்,எஸ்பான்யோல் அணியும் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் எஸ்பான்யோல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோஷிடட் அணியை எளிதாக வீழ்த்தியது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி,செல்டா விகோ அணியை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அட்லெடிகோ மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை பந்தாடியது.

மூன்றாவது லீக்கில் லாஸ் பல்மாஸ் அணி,பலமான வில்லர்ரியல் அணியை எதிர்கொண்டது.இறுதியில் வில்லர்ரியல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அத்லெடிக் பில்பாவோ அணியும் லெகானஸ் அணியும் மோதின.இந்த ஆட்டத்தில் அத்லெடிக் பில்பாவோ 2-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை எளிதாக வென்றது.

Leave A Reply

%d bloggers like this: