காத்மாண்டு:
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள விமான நிலையத்தில், வங்கதேசப் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியதில், 20 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து, 67 பயணிகள், 4 விமானப் பணிக்குழுவினர் ஆகிய 71 பேருடன், யு.எஸ்.-பங்ளா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு வந்தது.அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, ஓடுதளத்தை அடையும்முன், விமான நிலையத்துக்கு அருகே உள்ள கால்பந்தாட்ட மைதானத் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில், விமானத்தில் இருந்து 60 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் பயணித்தவர்களில் 50 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் தெரிவித்தன.

Leave A Reply

%d bloggers like this: