காத்மண்டு
நேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மண்டுவில் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்தை நோக்கி சென்ற பயணிகள் விமான விபத்துக்குள்ளானது. காத்மண்டு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வங்கதேச விமானத்தில் சுமார் 78 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில்  விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து  13 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை விபத்துக்குக்காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து காத்மண்டு  விமான நிலையம் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.