கொழும்பு:
இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.3-வது லீக் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின.முதலில் களமிறங்கிய இலங்கை அணி குஷால் பெரேரா (74 ரன்கள்), குஷால் மெண்டிஸ் (57 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 214 ரன்கள் குவித்தது.

மிகவும் கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கான 215 ரன்களை எளிதாக விரட்டி பிடித்து அசத்தியது.விக்கெட் கீப்பர் ரஹிம் 35 பந்தில் 72 ரன்கள் எடுத்து வங்கதேச அணியின் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மோசமான சாதனை:
இந்த தோல்வியின் மூலம் டி-20 போட்டியில் 50 தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி அணி படைத்துள்ளது.தற்போதய சூழ்நிலையில் இலங்கை அணிக்கு புதிய பகைவனாக வங்கதேசம் முளைத்துள்ளது.முக்கியமான போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றி கனவை வங்கதேச அணி தொடர்ந்து பறித்து வருவதால் அந்நாட்டு ரசிகர்கள் வங்கதேசத்தை பரம எதிரியாக கருதுகினறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: