தேனி,
குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி  காட்டுப்பகுதியில் நேற்று 39 பேர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென பரவியதால் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீயில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 10 பேருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. 5 போ் தேனி மருத்துவமனையிலும், 2 போ் தனியார் மருத்துவமனைகளிலும் 6 போ் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தீவிபத்தில் சிக்கியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகிய 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்பது  தெரியவந்துள்ளது.

Leave A Reply