தேனி:
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை தேனி அரசு மருத்துவமனையில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். பின்னர் குரங்கணி பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்என்எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், பெ.சண்முகம், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், முன்னாள் எம்எல்ஏ இரா.அண்ணாதுரை, கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: