கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணிக்காக டி-20 போட்டியில் மட்டும் விளையாடி வரும் ரமித் ராம்பக்வெல்லா குடிபோதையில் மாணவர்களுடன் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.26 வயதாகும் ரமித் ராம்பக்வெல்லா கொழும்பு நகரில் உள்ள பிரபல இரவு விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார்.தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வழியில் குடிபோதையில் மாணவர்களுடன் தகராறு செய்தது மட்டுமல்லாமல்,அவர்களை கொடூரமாக அடித்து உதைத்துள்ளார்.

இது தொடர்பாக புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ரமித் ராம்பக்வெல்லா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.ரமித் ராம்பக்வெல்லாவிகிற்கு இந்த சம்பவம் புதிதல்ல கடந்த ஆண்டு மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply