நாமக்கல், மார்ச் 12-
குடிநீர் கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட ராமாபுரம் பகுதி பெண்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் பகுதிக்கு உடையார் காலனியில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்து விட்டது.இந்த மின் மோட்டாரை பழுது பார்க்க அதிகாரிகள் எடுத்து சென்றனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும் மின் மோட்டாரை மீண்டும் பொருத்தாதல் எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பல மாதங்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்.எனவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து மின் மோட்டர் பழுதை நீக்கி விரைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.