சென்னை:
கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்திய சூப்பர் ‘லீக்’ (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா, இரு முறை கோப்பையை கோட்டைவிட்ட கேரளா, இந்த முறை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட புனே, ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் மூட்டையை கட்டிவிட்டன. தில்லி, நார்த் ஈஸ்ட் யுனைடட் (கவுகாத்தி), அணிகள் கடைசி இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.புதிய வரவான பெங்களூரு அணி தனது அசத்தலான ஆட்டத்தினால் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்துக்கு, 2015 ஆம் ஆண்டில் கோவாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை தட்டி வந்த சென்னை அணியும் சென்னை நேரு மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூரு அணியுடன் கோப்பைக்கு மல்லுக்கட்டும்.
முன்னதாக, பெங்களூர்- புனே அணிகளுக்கிடையில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது.

பிறகு, இரு அணிகளும் இரண்டாவது முறையாக கோதாவில் இறங்கின. தனது சொந்த மண்ணில் புனே அணியை ஊதி தள்ளியது பெங்களூரு அணி. அந்த அணியின் சூப்பர் ஸ்டாரும் இந்திய அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் அசத்தலான ஆட்டமும் ‘ஹாட்ரிக்’ கோலும் கை கெடுக்க பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கோவாவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சென்னை- கோவா அணிகள் தலா ஒரு கோல் அடித்ததால் ‘டிரா’வில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இன்று நடக்கும் ஆட்டம் இரு அணிகளுக்கு மிக முக்கியமானதாகும்.கடந்த 2013-ம் ஆண்டு சென்னை அணி கோவாவை வீழ்த்தி தான் ஐ.எஸ்.எல். கோப்பையை வென்றது. அதே போல் இம்முறையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு சாதகமாக இருப்பால் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும்
என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: