நேற்று முப்பாதாயிரம் பேர் என்றார்கள். இன்று ஐம்பாதயிரம் பேர் என்கிறார்கள். முதாளித்துவ ஊடகங்களே மறைக்க முடியாமல் சொல்ல வேண்டியதாகி விட்டது. கூகிளில் Mumbai Farmers Red Rally என்று தேடினால் செவ்வண்ணமாய் காட்சிகள் நிறைகின்றன.

விவாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், விவசாயத்தை விட்டு புலம் பெயர்கிறார்கள் என்ற நாளெல்லாம் கேள்விப்பட்டு வந்த செய்திகள் அதன் மீது ஏற்படுத்தப்பட்ட பிம்பங்கள் எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து :இதோ…. நாங்கள் இருக்கிறோம். எழுந்து வருகிறோம்” என தகதகத்து பெரும் அணியாய் திரண்டு வருகிறார்கள்.

எங்கிருந்தார்கள் இவர்கள் எல்லாம்?

இதுதான் மக்கள் எழுச்சியின் அற்புதம். புரட்சிக்கான பொறி.

இடதின் மரணம்’, என்றவர்களும், லெனின் சிலையை தகர்த்தவர்களும் அதிர்ச்சி கொண்டு பார்க்கிறார்கள்.

இந்த மண்ணில் புரட்சி ஒரு நாள் சாத்தியமாகும் என்பவர்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.

இந்திய வரலாற்றின் மகத்தான அத்தியாயம் ஒன்றை மகாராஷ்டிரா விவசாயிகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

லால் சலாம் விவசாயத் தோழர்களே!

Leave A Reply