பொள்ளாச்சி, மார்ச் 12-
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்.56 ஐ திரும்பப் பெறக்கோரி திங்களன்று அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஆதிசேஷய்யா தலைமையிலான சிக்கன சீராய்வு கமிட்டியினை கலைத்திட வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொள்ளாச்சி வட்ட கிளை துணைத் தலைவர் மதியரசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மு.சாமிகுணம், வட்ட கிளை இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் மீரான் மைதீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு:
இதேபோல் கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் எஸ்.ஜெகநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பி.ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஞானசேகரன், மாவட்ட இணை செயலாளர் சத்தியவாணிமுத்து, கிளை செயலாளர் என்.ஈஸ்வரமுர்த்தி, பொருளாளர் பாலராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேட்டூர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் கலையரசு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் து.சிங்கராயன் உள்பட்ட பலா கலந்து கெண்டனா.

Leave a Reply

You must be logged in to post a comment.