அகர்தலா, மார்ச் 11-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இடங்களில் பொதுவாக உள்ள சந்தைப் பகுதிகளையும் ஆர்எஸ்எஸ்/பாஜக வன்முறையாளர்கள் விட்டுவைக்கவில்லை. அவர்களைக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் ஜிரானியா உட்கோட்டத்தில் உள்ள லலித் பஜார் என்னும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் சந்தையிலும் பாஜக/ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வெறித்தாக்குதலைத் தொடுத்துள்ளனர். பாஜக வெற்றிபெறாத இடங்களில் உள்ள சாமானிய மக்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்கள். இதுதான் பாஜகவின் ஜனநாயக அரசியலாகும். இதனை அனுமதிக்க முடியாது. இதற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள் தொடரும்.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் தீக்கிரையாக்குவது போன்ற காரியங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறியர்கள் ஈடுபடவில்லை. அலுவலகங்களில் இருந்த அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் புத்தகங்கள், பத்திரிகைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. நாட்டின் அடிப்படை அரசமைப்புச்சட்ட மாண்புகளையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாகும்.

பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசியல் வன்முறை தடுத்துநிறுத்தப்பட்டு, முறியடிக்கப்படும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.