புதுச்சேரி, மார்ச் 11-
புதுச்சேரி பல்கலைகழக மின்னனு ஊடகம்வெகுஜென தொடர்பியல்துறை,மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கள் சார்பில் 7வது சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா புதுச்சேரி பல்கலைக் கழக ஜவஹர்லால் நேருகலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.விழாவிற்கு பல்கலைக் கழக பேராசிரியர் நலினிதம்பி தலைமை தாங்கினார்.

விழாவை துவக்கி வைத்து பேசிய அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார், “சமூகத்தில் நிகழும் வேதனைகள், வலிகளை ஆவணப்பட குறும்படங்கள் மூலம் எடுத்துறைக்க வேண்டும்” என்று இயக்குநர்களை கேட்டு கொண்டார். விழாவில் எடிட்டர் லெனின் பேசுகையில்,“சமூகஅவலத்தை பதிவு செய்யவும், சமூகத்தை முன்னேற்றும் வகையில் இந்த ஆவணப் படங்கள் குறும்படங்கள் இருக்க வேண்டும். அத்தகைய சிறந்த பதிவு செய்யும் இயக்குநர்கள் மூன்று பேரை தேர்வு செய்து அடுத்தஆண்டிலிருந்து திரிபுரா முன்னால் முதல்வர் மாணிக்சர்க்கார் பெயரில் தலா ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச் செல்வன், திரைப்பட இயக்குநர் எம்.சிவக்குமார், மும்பை திரைப்பட பிரிவு ஒருங்கிணைப்பாளர் என்.அனில்குமார், பல்கலைக் கழக பொறுப்பு பதிவாளர் டாக்டர் கே. தரணிக்கரசு, துறைத் தலைவர் பேரா.கே.ராமையா, விழா ஒருங்கிணைப்பாளர் சு. ராமச்சந்திரன், திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணா, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க பிரதேசத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் உமா, தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் திரளானோர் விழாவில் பங்கேற்றனர்.

நிறைவு விழா
திரைப்பட விழாவின் முதல் நாளில் 10 படங்கள் திரையிடப்பட் டன. விவசாயம், சுற்றுச்சூழல், கல்வி, சமூக பிரச்சினைகள், பெண்கள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியவை குறித்து இப்படங்கள் பேசுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: