இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம்

தேசிய பெண் ஆசிரியர் மாநாடு நடத்த தீர்மானம்

புதுதில்லி, மார்ச் 11-

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுதில்லியில் உள்ள சாதிப்பூர், ஆசிரியர் பவனில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார்.  தேசிய பொருளாளர் டி.கண்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.என்.பார்தி, இணை பொதுச்செயலாளர் கே.சி.ஹரிகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ச.மோசஸ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், மாநிலத்தலைவர்  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர்,  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் மாநில தலைவர் ரமேஷ்குமார், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி சங்க செயலாளர் உதயசூரியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மன்ட் ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடையே, செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய பொருளாளர் டி.கண்ணன், தேசிய துணைத்தலைவர் கே.ராஜேந்திரன் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ச.மோசஸ், செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கூறியதாவது.

  • தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு ஜுலை மாதம் தமிழகத்தில் நடத்துவது.  அதற்கு முன்னர் ஜுன் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (School Teachers Federation of India) 7ஆவது தேசிய மாநாடு 2018 மே  4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், ஒரிசா மாநிலம் பூரி மாநகரில் மிக சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு ஒரிசா மாநில ஆசிரியர் சங்கம் உரிய உதவிகளைச் செய்திடும்.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)  6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும்,
  • தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டும் என்றும்,
  • மேலும் 5 இலட்சம்  ரூபாய் முதல் 8 இலட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரியும் 8முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20% வரியும் ரூபாய் 13 இலட்சத்திற்கு மேல் 30% சதவிகித வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவித்திட வேண்டும் என்றும்,

v  வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைத்திட  வேண்டும் என்றும்,

  • வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீளப் பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படிகள் என்பதால், இவற்றை வருமானமாகக் கருதாமல் செலவினமாக கருத வேண்டும் என்றும்,
  • 80C பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழித்தொகை ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும் என்றும்,
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும்,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(ந.நி.)

(படக்குறிப்பு)

புதுதில்லி, சாதிப்பூர் ஆசிரியர் பவனில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், டி.கண்ணன், செ.நா.ஜனார்த்தனன், கே.பி.ஒ.சுரேஷ், மோசஸ், சங்கர், உதயசூரியன், பேட்ரிக்ரெய்மன்ட், ரமேஷ்குமார், ஆகியோர்.

Leave A Reply

%d bloggers like this: