புதுதில்லி, மார்ச் 11-

திரிபுராவில் புதிய அமைச்சரவைப் பொறுப்பேற்ற சமயத்தில் பிரதமர் மோடி மாநிலத்தில் வளர்ச்சி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தும் என்று வழக்கம்போல் திருவாய்மலர்ந்திருக்கிறார்.

ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தங்கள் கட்சி பெரும்பான்மை பெற்றுக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தவுடனேயே மாநிலம் முழுதும் ஆர்எஸ்எஸ்/பாஜக குண்டர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடத் துவங்கிவிட்டார்கள். திரிபுரா மாநிலத்தில் கண்டச்சேரா என்னும் ஊரைச் சர்ந்த இளைஞர் உமேஷ் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று, ரூபைசாரி  என்னுமிடத்தில் உள்ள சப்ரூமில்  அமல் நந்தி என்னும் விவசாயத் தொழிலாளி,  கொடூரமான முறையில் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். தற்போது இவர் உதய்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தலக் கமிட்டி அலுவலகம் 4ஆம் தேதி இரவே முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டது. தோழர் ஜிதேந்திர சவுத்ரி மக்களுடன் இவ்விடங்களுக்குச் சென்று பார்த்தார்.

இதுதான் மோடி, அமித்ஷா, பிப்லவ தேவ் கூறும் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலா?

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.