திருப்பூர். மார்ச் 11-
ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என பவர்டேபிள் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சனியன்று பவர்டேபிள் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 16 சதவிகிதம் கூலி உயர்வை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் அமல்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்த வேண்டிய 7 சதவிகிதம் கூலி உயர்வை இன்னும் அமல்படுத்தவில்லை. இதுசம்மந்தமாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தினர் உரிய பதிலளிக்கவில்லை. ஆகவே, இரண்டாம் கட்ட கூலி உயர்வை ஒப்பந்தப்படி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர் சங்கங்ளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புவது. இந்த தொகையை கொடுக்க ஒருவார காலம் அவகாசம் கொடுப்பது. அதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றால் நிர்வாகிகளுடன் பேசி வேலை நிறுத்தம் அறிவிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக. இந்த கூட்டத்தில் சங்கத்தின் துணை தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணை செயலாளர் முருகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: