புதுதில்லி:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், அமெரிக்காவின் காய்ஓஎஸ்  டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சூப்பர் திட்டமான ஜியோ போனுக்கான மென்பொருள் தயாரிப்பது அமெரிக்காவின் காய்ஓஎஸ் நிறுவனம் தான், இந்த இந்நிறுவனத்தில்தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 16 சதவிகிதப் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ஜியோபோன் என்பது இந்தியாவின் முதல் 4ஜி பியூச்சர் போன் என்ற நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்தை ரிலையன்ஸ் கைப்பற்றும் முயற்சியாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெறும் முயற்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த 16 சதவிகித பங்குகளைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 7 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் குழுமம் கொடுத்த அறிக்கையில், ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 19 லட்சத்து 4 ஆயிரத்து 781 பங்குகளை தலா 3.675 டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சேவையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது. இதன் மூலம் மென்பொருள் துறையில் நுழைய ரிலையன்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.