கான்பூர்:
நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரோடோமேக் முதலாளி விக்ரம் கோத்தாரி, இந்திய வங்கிகளில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடி செய்தது அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், நிறுவனத்தின் கடனை மறுசீரமைப்புச் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால், முதல் 90 நாள் நீட்டிப்பில் மறுசீரமைப்புத் தோல்வி அடைந்துள்ளது.இந்நிலையில் ரோடோமேக் இந்நிறுவனத்தின் இரு கிளை நிறுவனங்களான ரோடோமேக் எஸ்போர்ட்ஸ் மற்றும் ரோடோமே குளோபல் ஆகியவற்றைக் கடனுக்கான தீர்வு காணாத பட்சத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.ரோடோமேக் குழுமத்தின் 4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்கான கடன் தீர்வையை 180 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். இதற்கான காலம் வருகிற மார்ச் 19-ஆம் தேதி முடிவடைகிறது. ஐபிசி சட்டத்தின் கீழ் இதன் காலம் அதிகப்படியாக 90 நாட்கள் வரையில் நீட்டிக்கப்படலாம்.

ஆனால், ரோடோமேக் நிறுவனங்களுக்கான தீர்வு காணும் பொறுப்பை வகிக்கும் அனில் கோயல், தீர்வு காணுவதற்கான காலம் எதுவும் இதுவரை நீட்டிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: