புதுதில்லி:
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, விமான போக்குவரத்துத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மோடி அரசு மறுத்து விட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் மத்திய இணையமைச்சர் ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில் அசோக் கஜபதி ராஜூ வகித்து வந்த விமானப் போக்குவரத்து துறை, சுரேஷ் பிரபுவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.சுரேஷ் பிரபு தற்போது, மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: