புதுதில்லி:
கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடியே 33 லட்சம் பேர் ‘நோட்டா’வுக்கு வாக்களித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.புதுதில்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ஏடிஆர்) கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை நாட்டில் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகள் குறித்து ஆய்வு செய்தது. அது குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் இதில் கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு ஆதரவாக, ஒரு கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 577 வாக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.சராசரியாக தேர்தல் ஒன்றுக்கு 2.70 லட்சம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நோட்டா 1.08 சதவிகிதம் (60 லட்சத்து 2 ஆயிரத்து 942) வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.அதிகபட்சமாக தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் 46ஆயிரத்து 559 வாக்குகளும், மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 123 வாக்குகளும் அப்போது பதிவாகியுள்ளன.கடந்த 2015-ஆம் ஆண்டு பீகார், தில்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக நோட்டாவில் 2.08 சதவிகித வாக்குகள் பதிவாகின. பீகார் மாநிலத்தில் 9 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகளும், தில்லியில் 35 ஆயிரத்து 897 வாக்குகளும் பதிவாகின.கோவா, தில்லி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளைத் தவிர்த்து அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கே கிடைத்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.