கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான்,தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி,அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில் ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன் னை துன்புறுத்துவதாகவும்,கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முகமது ஷமி,எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது.என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வியாழனன்று கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல் நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் மனைவியை கொடுமைப்படுத்துதல்,துன்புறுத்துதல்,காயப்படுத்துதல்,கற்பழிப்பு,கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மீதான புகார்களின் அடிப்படையில் இந்திய வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.விசாரணையின் முடிவில் ஒப்பந்தத்தில் ஷமியை சேர்ப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: