பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலி‌ஷபா என்ற பெண்ணிடம் பலமுறை பணம் வாங்கியுள்ளார்.ஆனால் இந்த பணம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதில் கூறாமல் மழுப்பி விடுகிறார் என ஹசின் ஜகான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.மனைவியான என்னை ஏமாற்றும் போது நாட்டை ஏன் ஏமாற்றி இருக்க மாட்டார்.இந்த பணம் சூதாட்டத்துக்காக(மேட்ச் பிக்சிங்) கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.துபாய் ஹோட்டலில் ஷமி பணம் வாங்கியதற்காக ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

இந்திய அணி வேகபபந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஆக்ரோஷமான பவுன்சர்களால் எதிரணியை திணறடிப்பது வழக்கம்.ஆனால் தற்போது அவருடைய மனைவி ஹசின் ஜகான் தனது ஆக்ரோஷமான குற்றசாட்டுகள் மூலம் ஷமி அணுகுண்டுகளை வீசிவருகிறார்.மனைவி வீசும் அணுகுண்டுகளை முகமது ஷமி எந்த விதத்தில் தாக்கு பிடிப்பார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: