அகர்தலா:
திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக-வைச் சேர்ந்த பிப்ளவ் குமார் தேவும், துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மனும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுநர் ததகதா ராய், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு நடந்த தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாணிக் சர்க்கார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு இல்லத்தையும் உடனடியாக காலி செய்தார்.

அதைத் தொடர்ந்து பாஜக அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. அகர்தலாவில் நடந்த விழாவில் திரிபுரா மாநில முதல்வராக பிப்ளவ் குமார் தேவ், துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மனும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் ததகதா ராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வந்த பிப்ளவ் குமார்  தேவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரை சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
அப்போது, பிப்ளவ்   குமாருக்கு, மாணிக் சர்க்கார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: