சியோல்:
5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் பங்கேற்க இந்திய ஹாக்கி அணி தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது.இந்நிலையில் இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வெள்ளியன்று நடைபெற்றது.இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில்(குர்ஜித் கவுர்) முதல் கோலை அடித்து தென்கொரிய அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.

இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர்(2-வது நிமிடம்), தீபிகா (14-வது நிமிடம்), பூனம் ராணி (47-வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடித்து அசத்தினர்.தென்கொரிய அணி தரப்பில் ஹின் பார்க் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.இந்த தொடரில் இந்திய 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.