தமிழக வீரர் தருண் சாதனை                                                                                                                          பாட்டியாலா
பாட்டியாலாவில் நடைபெற்று வரும் சீனியர் தடகளப் போட்டியில் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் 49.45 விநாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தி, காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, 49.94 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 10 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சிபிஐ காவல் நீட்டிப்பு                                                                                                                                         புதுதில்லி
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரி வாசலில் மாணவி கொலை                                                                                                          சென்னை:
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

காவிரி நீரில் கழிவைக் கலக்கிறது கர்நாடகா                                                                                         புதுதில்லி:
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி நீரில் கழிவு கலக்கப்படுவதாக மாசு கட்டுபாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மாசு கட்டுபாட்டு வாரியம் அறிக்கை சமர்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு பிறகு விரிவாக நடைபெறும்.

                                                                                                                                                                              மோடியிடம் விமானத் துறை                                                                                                                           புதுதில்லி:
ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இதில் அசோக் கஜபதி ராஜு விமானப் போக்குவரத்துத்துறையைக் கவனித்து வந்தார். விமானப் போக்குவரத்துத்துறையைப் பிரதமர் மோடி கூடுதலாகக் கவனிப்பார்.

விவேக் ஜெயராமன் மீண்டும் ஆஜர்
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் 2 வது முறையாக விவேக் ஜெயராமன் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே விவேக் ஒருமுறை ஆஜராகி நீதிபதி ஆறுமுகசாமியின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிலையில் மீண்டும் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து வெள்ளியன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

ரூ.5-க்கு சானிடரி நாப்கின்
சென்னை:
மும்பை – தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை மேற்கு ரயில்வே பொருத்தியுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்காக மேற்கு ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரூ.5-க்கு கிடைக்கும் வகையில் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: