புதுதில்லி, மார்ச் 9-

திரிபுரா மாநிலத்தில் சாரிலம் என்னும் தொகுதிக்கான தேர்தல் ஒத்திபோடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி, இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைத் தேர்தல் ஆணையரையும் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் சந்தித்து, திரிபுரா மாநிலம் சாரிலம் தொகுதிக்கான தேர்தலை மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும்வரை ஒத்திபோட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திரிபுரா மாநிலத்தில் சாரிலம் தொகுதியில் வரும் மார்ச் 12 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இறந்ததை அடுத்து இத்தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

திரிபுராவில் தேர்தல்கள் முடிவடைந்ததைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் பாஜகவினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். சாரிலம் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் 58 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.  19 ஊழியர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள்.  சாரிலம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி அலுவலகத்தைக்கூட தாக்காமல் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகங்களும் காவல்துறையினரின் உதவியுடன்  பாஜகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைத் தடுத்திட காவல்துறையினர் எதுவும் செய்யவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு நியாயமான மற்றும் அமைதியான வாக்குப்பதிவு என்பது சாத்தியமில்லை. எனஅவ சாரிலம் தொகுதிக்கான தேர்தலை அங்கே அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும்வரை ஒத்திபோட வேண்டும்.

இவ்வாறு எம்.ஏ.பேசி, தலைமைத் தேர்தல் ஆணையரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.  தலைமைத் தேர்தல் ஆணையர், விவரங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரிடமிருந்து கேட்டறிந்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.