பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ஆசிய வில்வித்தை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கலப்பு பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் முஷ்கன் கிரார் மலேசியாவின் நாதிரா சக்காரியா ஆகியோர் மோதினர்.மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 139-136 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முஷ்கன் கிரார் தங்கம் வென்றார்.

தனிநபர் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற இந்தியாவின் புரோமிலா டைமாரி, ரஷ்யாவின் எர்டினினிவா நட்டாலியாவை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.தனிநபர் ஆண்கள் பிரிவில் கவுரவ் டிராம்பக் லாம்பே ஆண்கள் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தனர்.பெண்கள் பிரிவில் வித்வான் மது வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.