தீக்கதிர்

திருமணம் எல்லைகள் அல்ல…கவிஞர் பழனிபாரதி

இருக்கும் சமையலறை
இருவரின் படுக்கையறை
இறைவனின் பூஜையறை

இவை மட்டும் வாழ்க்கை இல்லையடி
உலகங்கள் இன்னும் உள்ளதடி

வீடுகள் கூடுகள்தானே
விடுதலை வானத்தில்தானே
திருமணம் எல்லைகள் அல்ல
உறவுகள் முடிவதும் அல்ல

இந்த உலகம் முழுவதும் இங்கே
நீ வாழும் வீடுதானே…

– பழநிபாரதி
# மகளிர் தின வாழ்த்துகள்