சென்னை:
காவலர் தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தானாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

காவலர் தாக்கி மரணமடைந்த அப்பெண்ணின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் அத்துமீறி நடப்பது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வத்தாமன், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் முறையிட்டார்.
அப்போது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி சம்பவத்துக்கு காரணமாக காவலர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி வித்தார்.

இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்திருந்தால், அது தொடர்பான தகவல்களுடன் நீதி மன்றத்தை நாடினால் தானாக முன்வந்து வழக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ரூ.7லட்சம் நிவாரணம்
இதனிடையே உஷாவின் குடும் பத்திற்கு ரூ.7லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி காமராஜ் வெறுமனே இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: