சென்னை:
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எச்ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆனூர் ஜெகதீசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ராஜா பேச்சால் தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாகவும் அதனால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: