சேலம், மார்ச் 7-
சேலம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திற்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு திட்டமான ராஷ்ட்ரிய வயோஷி யோஜனா திட்டத்தின் கீழ் நல்ல நிலையில் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் ALIMCO நிறுவனத்தின் உதவியுடன் காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், கண் கண்ணாடிகள் மற்றும் பல்செட், ஆகிய உபகரணங்கள் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மார்ச் 13 ஆம் தேதி எடப்பாடியிலும், 14 ஆம் தேதி ஆத்தூரிலும், 15 ஆம் தேதி சங்ககிரியிலும் மற்றும் மார்ச் 16 ஆம் தேதி ஓமலூரிலும் நடைபெறுகிறது. முகாம்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 9.30 முதல் பிற்பகல் 3 வரை நடைபெறுகிறது.

இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் கலந்து கொண்டு உபகரணங்கள் தேவைப்படுவோர்களை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, உபகரணங்கள் தேவைப்படும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 60 வயது பூர்த்தியான மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டைநகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், புகைப்படம் இரண்டு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் எனில் ஊராட்சி அலுவலகம் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் எனச் சான்று மற்றும் ஓய்வூதியம் பெறுபவர் எனில் அதற்கான சான்று அல்லது வருமானச் சான்று ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்கு அருகாமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைந்திடுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: